/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஜெய்ஸ்வால் 'நம்பர்-4': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்ஜெய்ஸ்வால் 'நம்பர்-4': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
ஜெய்ஸ்வால் 'நம்பர்-4': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
ஜெய்ஸ்வால் 'நம்பர்-4': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
ஜெய்ஸ்வால் 'நம்பர்-4': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
ADDED : ஜூலை 31, 2024 11:13 PM

துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ஜெய்ஸ்வால் 4வது இடத்துக்கு முன்னேறினார்.
சர்வதேச 'டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது.
பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 757 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருந்து 'நம்பர்-4' இடத்துக்கு முன்னேறினார். இலங்கைக்கு எதிரான 'டி-20' தொடரில் 3 போட்டியில், 80 ரன் எடுத்தார். இந்திய துவக்க வீரர் சுப்மன் கில் (613), 16 இடம் முன்னேறி முதன்முறையாக 21வது இடத்தை கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் (805 புள்ளி) 'நம்பர்-2' இடத்தில் நீடிக்கிறார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (844) தொடர்கிறார்.
பிஷ்னோய் 'நம்பர்-10': பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய், 635 புள்ளிகளுடன் 18வது இடத்தில் இருந்து 10வது இடத்துக்கு முன்னேறினார். இலங்கை தொடரில் 'சுழலில்' அசத்திய இவர், அதிகபட்சமாக 6 விக்கெட் சாய்த்தார். மற்றொரு இந்திய சுழல் வீரர் அக்சர் படேல் (627) 13வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
மற்ற இந்திய பவுலர்களான அர்ஷ்தீப் சிங் (19வது இடம்), வாஷிங்டன் சுந்தர் (40வது), முகமது சிராஜ் (47வது) முன்னேற்றம் கண்டனர்.
'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா (199), அக்சர் படேல் (149) முறையே 6, 13வது இடத்தில் தொடர்கின்றனர்.