Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் * இலங்கை 'டி-20' தொடருக்கு...

இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் * இலங்கை 'டி-20' தொடருக்கு...

இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் * இலங்கை 'டி-20' தொடருக்கு...

இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் * இலங்கை 'டி-20' தொடருக்கு...

ADDED : ஜூலை 18, 2024 11:01 PM


Google News
Latest Tamil News
மும்பை: இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. 'டி-20' அணி கேப்டனாக சூர்யகுமார் நியமிக்கப்பட்டார். ஒருநாள் தொடரில் கேப்டன் ரோகித், கோலி பங்கேற்க உள்ளனர்.

இலங்கை செல்லவுள்ள இந்திய அணி, மூன்று 'டி-20', மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 'டி-20' போட்டி வரும் ஜூலை 27, 28, 30ல் பல்லேகெலே, ஒருநாள் போட்டி ஆக., 2, 4, 7 ல் கொழும்புவில் நடக்க உள்ளன. இதற்கான இந்திய அணி தேர்வு நேற்று மும்பையில் நடந்தது. புதிய பயிற்சியாளர் காம்பிர், அகார்கர் தலைமையிலான தேர்வுக்குழுவினர் அணியை அறிவித்தனர்.

புதிய திருப்பம்

ரோகித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில், துணைக் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, 'டி-20' அணிக்கு தலைமை ஏற்பார் என நம்பப்பட்டது. ஆனால் புதிய திருப்பமாக சூர்யகுமார் 33, கேப்டனாக நியமிக்கப்பட்டார். சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக இருந்த சுப்மன் கில், 'டி-20', ஒருநாள் அணி துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இத்தொடரில் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு தரப்பட்டது.

ரோகித் வருகை

'டி-20' உலக கோப்பை வென்று தந்த, ஒருநாள் அணி கேப்டன் ரோகித் சர்மா, கோலி தற்போது வெளிநாட்டில் ஓய்வில் உள்ளனர். செப்டம்பர் மாதம் இந்திய மண்ணில் நடக்கும் தொடரில் தான் பங்கேற்பர் என கூறப்பட்டது.

ஆனால், அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) தொடர் நடக்கவுள்ள நிலையில் இருவரும் ஒருநாள் அணிக்கு திரும்பினர். சமீபத்தில் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ், 2019க்குப் பின் ஷிவம் துபே, ராகுல் உள்ளிட்டோர் தேர்வாகினர். 'டி-20'ல் ஓய்வு பெற்ற ஜடேஜா, ஒருநாள் அணியில் புறக்கணிக்கப்பட்டார்.

'டி-20' அணி கேப்டன் சூர்யகுமார், சஞ்சு சாம்சனுக்கு ஒருநாள் அணியில் இடமில்லை. ஹர்திக் பாண்ட்யா தனிப்பட்ட காரணங்களுக்காக ஒருநாள் தொடரில் விலகினார். ரியான் பராக் 22, முதன் முறையாக ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ், சகால், எவ்வித அணியிலும் சேர்க்கப்படவில்லை.

'டி-20' அணி

சூர்யகுமார் (கேப்டன்), சுப்மன் கில் (துணைக் கேப்டன்), ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷாப் பன்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது சிராஜ்.

ஒருநாள் அணி

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணைக் கேப்டன்), கோலி, ராகுல், ரிஷாப் பன்ட், ஸ்ரேயாஸ், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், கலீல் அகமது, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us