/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/கோப்பை வென்றது இந்தியா: தென் ஆப்ரிக்க பெண்கள் ஏமாற்றம்கோப்பை வென்றது இந்தியா: தென் ஆப்ரிக்க பெண்கள் ஏமாற்றம்
கோப்பை வென்றது இந்தியா: தென் ஆப்ரிக்க பெண்கள் ஏமாற்றம்
கோப்பை வென்றது இந்தியா: தென் ஆப்ரிக்க பெண்கள் ஏமாற்றம்
கோப்பை வென்றது இந்தியா: தென் ஆப்ரிக்க பெண்கள் ஏமாற்றம்
UPDATED : ஜூன் 23, 2024 11:30 PM
ADDED : ஜூன் 23, 2024 11:29 PM

பெங்களூரு: மூன்றாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய பெண்கள் அணி, 3-0 என தொடரை முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது. தென் ஆப்ரிக்க அணி ஏமாற்றம் அடைந்தது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்தியா, ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. பெங்களூருவில் மூன்றாவது போட்டி நடந்தது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் (61), தஸ்மின் பிரிட்ஸ் (38) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. மரிசான் கேப் (7), போஷ் (5), சுலே லுாஸ் (13) ஏமாற்றினர். நாடின் டி கிளார்க் (26), மைக் டி ரிடர் (26*) ஆறுதல் தந்தனர். தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 215 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் அருந்ததி ரெட்டி, தீப்தி சர்மா தலா 2, ஸ்ரேயங்கா பாட்டீல், பூஜா தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.
மந்தனா அபாரம்
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா (25) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. பிரியா புனியா (28) ஓரளவு கைகொடுத்தார். அபாரமாக ஆடிய மந்தனா அரைசதம் கடந்தார். இவர், 90 ரன்னில் (11 பவுண்டரி) அவுட்டானார். மறுமுனையில் அசத்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (42) 'ரன்-அவுட்' ஆனார். துமி செகுகுனே பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரிச்சா கோஷ் வெற்றியை உறுதி செய்தார்.
இந்திய அணி 40.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 220 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஜெமிமா (19), ரிச்சா (6) அவுட்டாகாமல் இருந்தனர்.
3500
ஒருநாள் போட்டி அரங்கில் 3500 ரன் குவித்த 3வது இந்திய வீராங்கனையானார் மந்தனா. இதுவரை 85 போட்டியில், 7 சதம், 27 அரைசதம் உட்பட 3585 ரன் எடுத்துள்ளார். ஏற்கனவே மிதாலி ராஜ் (7805 ரன், 232 போட்டி), ஹர்மன்பிரீத் கவுர் (3565 ரன், 133 போட்டி) இம்மைல்கல்லை எட்டினர்.