Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இங்கிலாந்து அணி அபாரம்: சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்

இங்கிலாந்து அணி அபாரம்: சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்

இங்கிலாந்து அணி அபாரம்: சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்

இங்கிலாந்து அணி அபாரம்: சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்

UPDATED : ஜூலை 10, 2024 11:07 PMADDED : ஜூலை 10, 2024 10:15 PM


Google News
Latest Tamil News
லண்டன்: லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து பவுலர்கள் அசத்தினர். வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 121 ரன்னுக்கு சுருண்டது.

இங்கிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் முதல் டெஸ்ட் துவங்கியது. இது, இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பங்கேற்கும் கடைசி டெஸ்ட். 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அட்கின்சன் தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' கேப்டன் கிரேக் பிராத்வைட் (6), கிர்க் மெக்கென்சி (1) வெளியேறினர். ஸ்டோக்ஸ் பந்தில் மிகைல் லுாயிஸ் (27) அவுட்டானார். தொடர்ந்து மிரட்டிய அட்கின்சன் பந்தில் அலிக் அதானஸ் (23), ஜேசன் ஹோல்டர் (0), ஜோஷுவா டா சில்வா (0) ஆட்டமிழந்தனர். கவேம் ஹாட்ஜ் (24) நிலைக்கவில்லை. அட்கின்சன் பந்தில் அல்சாரி ஜோசப் (17), ஷமர் ஜோசப் (0) 'பெவிலியன்' திரும்பினர். ஆண்டர்சன் பந்தில் ஜெய்டன் சீல்ஸ் (2) அவுட்டானார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 121 ரன்னுக்கு சுருண்டது. குடகேஷ் மோதி (14) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் அட்கின்சன் 7 விக்கெட் சாய்த்தார்.

பின் முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு கிராலே (76), போப் (57) கைகொடுத்தனர். தேநீர் இடைவேளைக்கு பின் 158/3 ரன் எடுத்து, 37 ரன் முன்னிலை பெற்றிருந்தது. ரூட் (9), புரூக் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

அசத்தல் அறிமுகம்

அறிமுக டெஸ்டில் அசத்திய இங்கிலாந்து பவுலர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார் அட்கின்சன் (12 ஓவர், 7 விக்கெட், 45 ரன்). முதலிடத்தில் டொமினிக் கார்க் (19.3 ஓவர், 7 விக்கெட், 43 ரன், எதிர்: வெஸ்ட் இண்டீஸ், 1995, இடம்: லார்ட்ஸ்) உள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us