/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இங்கிலாந்து ரன் குவிப்பு: வெஸ்ட் இண்டீஸ் தடுமாற்றம்இங்கிலாந்து ரன் குவிப்பு: வெஸ்ட் இண்டீஸ் தடுமாற்றம்
இங்கிலாந்து ரன் குவிப்பு: வெஸ்ட் இண்டீஸ் தடுமாற்றம்
இங்கிலாந்து ரன் குவிப்பு: வெஸ்ட் இண்டீஸ் தடுமாற்றம்
இங்கிலாந்து ரன் குவிப்பு: வெஸ்ட் இண்டீஸ் தடுமாற்றம்
ADDED : ஜூலை 11, 2024 10:18 PM

லண்டன்: ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித் அரைசதம் விளாச, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 371 ரன் குவித்தது.
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 121 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 189/3 ரன் எடுத்திருந்தது. ரூட் (15), புரூக் (25) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் பொறுப்பாக ஆடிய ஹாரி புரூக் (50) அரைசதம் விளாசினார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (4) ஏமாற்றினார். மறுமுனையில் அசத்திய ஜோ ரூட் (68) அரைசதம் கடந்தார். கிறிஸ் வோக்ஸ் (23), அட்கின்சன் (0) சோபிக்கவில்லை. நிதானமாக விளையாடிய ஜேமி ஸ்மித், தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார்.
சோயப் பஷீர் (0) 'ரன்-அவுட்' ஆனார். ஜேமி ஸ்மித் (70) நம்பிக்கை தந்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 371 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. தவிர, 250 ரன் முன்னிலை பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 4, ஜேசன் ஹோல்டர், குடகேஷ் மோதி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
பின் 2வது இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் கிரேக் பிராத்வைட் (4), கிர்க் மெக்கென்சி (0), லுாயிஸ் (14), கவேம் ஹாட்ஜ் (4) ஏமாற்றினர். தேநீர் இடைவேளைக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 52/4 ரன் எடுத்திருந்தது. ஜேசன் ஹோல்டர் (6), அலிக் அதானஸ் (22) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 2, ஆண்டர்சன், அட்கின்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.