/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/சி.கே. நாயுடு டிராபி: தமிழக அணி தோல்விசி.கே. நாயுடு டிராபி: தமிழக அணி தோல்வி
சி.கே. நாயுடு டிராபி: தமிழக அணி தோல்வி
சி.கே. நாயுடு டிராபி: தமிழக அணி தோல்வி
சி.கே. நாயுடு டிராபி: தமிழக அணி தோல்வி
ADDED : ஜன 31, 2024 05:21 PM

நத்தம்: ரயில்வேஸ் அணிக்கு எதிரான சி.கே. நாயுடு டிராபி லீக் போட்டியில் தமிழக அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் 23 வயதுக்குட்பட்டோருக்கான சி.கே. நாயுடு டிராபி (நான்கு நாள்) முதல் தர கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர். கல்லுாரி மைதானத்தில் நடந்த 'டி' பிரிவு 3வது சுற்றுப் போட்டியில் தமிழகம், ரயில்வேஸ் அணிகள் மோதின.
முதல் இன்னிங்சில் தமிழகம் 360, ரயில்வேஸ் 259 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் தமிழக அணி 2வது இன்னிங்சில் 93/9 ரன் எடுத்திருந்தது. நான்காம் நாள் ஆட்டத்தில் தமிழக அணிக்கு கோவிந்த் (0) ஏமாற்றினார். தமிழக அணி 2வது இன்னிங்சில் 101 ரன்னுக்கு சுருண்டது. விக்னேஷ் (7) அவுட்டாகாமல் இருந்தார். ரயில்வேஸ் சார்பில் தியாகி, தமன்தீப் சிங் தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.
பின் 203 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ரயில்வேஸ் அணிக்கு அதர்வ் கருல்கர் (31) நல்ல துவக்கம் தந்தார். அன்ஷ் யாதவ் (86*), மராத்தே (70*) கைகொடுக்க ரயில்வேஸ் அணி 2வது இன்னிங்சில் 203/1 ரன் எடுத்து வெற்றி பெற்றது.