/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/லக்சயா சென் வெற்றி: பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டனில்லக்சயா சென் வெற்றி: பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டனில்
லக்சயா சென் வெற்றி: பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டனில்
லக்சயா சென் வெற்றி: பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டனில்
லக்சயா சென் வெற்றி: பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டனில்
ADDED : ஜூலை 27, 2024 11:50 PM

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியை இந்திய பாட்மின்டன் வீரர் லக்சயா சென் வெற்றியுடன் துவக்கினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், 33வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதன் பாட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் 'எல்' பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், கவுதமாலாவின் கெவின் கோர்டான் மோதினர். முதல் செட்டை 21-8 என மிகச்சுலபமாக கைப்பற்றிய லக்சயா, 2வது செட்டை 22-20 என போராடி வென்றார். முடிவில் லக்சயா சென் 21-8, 22-20 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
ஆண்கள் இரட்டையர் 'சி' பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, பிரான்சின் லுாகாஸ் கோர்வி, ரோனன் லாபர் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 21-17 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, 2வது செட்டை 21-14 என வென்றது. முடிவில் சாத்விக்-சிராக் ஜோடி 21-17, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது.
ஹர்மீத் தகுதி: டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய், ஜோர்டானின் ஜைத் அபோ யமன் மோதினர். முதன்முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஹர்மீத் 4-0 (11-7, 11-9, 11-5, 11-5) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் ஒற்றையர் பிரிவு பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றார்.