
மார்ச் 2026 : 21 படங்களில் ஒரே ஒரு படம்தான் வெற்றி…
மார்ச் மாதத்தின் முதல் வார வெள்ளிக்கிழமை மார்ச் 6ம் தேதி “99/66, செல்லமடா நீ எனக்கு, காதல் ரீசெட் ரிபீட், மூரி, முஸ்தபா முஸ்தபா, ஓ பட்டர்பிளை, வடம், வசூல் மன்னன், யார்ரா அந்த பையன் நான்தான் அந்த பையன்” ஆகிய 9 படங்கள் வெளிவந்தன. இந்த வருடத்தில் இதுவரையில் கடந்து போன வாரங்களில் ஒரு வாரத்தின் ஒரு நாளில் அதிகப் படங்கள் வெளிவந்த நாளாக அந்த நாள் அமைந்தது. 9 படங்கள் வெளியானாலும் வசூல் ரீதியாக அவை லாபமாக இல்லை. ஆனாலும், சில படங்களுக்கு வெற்றிகரமான 3வது வாரம் என கடந்த வாரம் வரை விளம்பரம் செய்து வந்துள்ளார்கள்.
மார்ச் 13ம் தேதி “அந்தோணி, திவ்யா, கெளுத்தி, கெணத்த காணோம், கொலைச் சேவல், போலீஸ் பேமிலி, வெஞ்சென்ஸ், வௌவல்ஸ்” ஆகிய படங்கள் வெளிவந்தன. அவற்றில் "கெணத்த காணோம்" படத்திற்கு சக்ஸஸ் மீட் நடத்தி படம் வெற்றி என்று அறிவித்தார்கள்.
மார்ச் 19ம் தேதி அன்று ஒரே ஒரு படமாக "யூத்" படம் வெளிவந்தது. இளம் அறிமுக இயக்குனரான கென் கருணாஸ் இப்படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்திருந்தார். இப்படம் 50 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் விசாரித்ததிலும் இந்தப் படத்தின் வசூல் திருப்தியாக இருந்ததாகச் சொல்கிறார்கள். ஒரே ஒரு படமாக அந்த வாரத்தில் வெளிவந்து, இந்த மாதத்தின் ஒரே ஒரு வெற்றிப் படமாக இந்தப் படம் மட்டுமே அமைந்தது.
மார்ச் 27ம் தேதி அன்று "ஹாப்பி ராஜ், நீ பார்எவெர், சாத்தான் த டார்க்" ஆகிய படங்கள் வெளிவந்தன. ஜிவி பிரகாஷ்குமார் நாயகனாக நடித்த "ஹாப்பி ராஜ்" படத்திற்கு சுமாரான வரவேற்பு கிடைத்துள்ளது. தியேட்டர் வசூலில் தப்பிக்கும் வாய்ப்புகள் குறைவு என்றுதான் சொல்கிறார்கள்.
ஓடிடி தளத்தில் கடந்த மாதம் வெளியான ஒரே படமாக "மேட் இன் கொரியா" உள்ளது. இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பள்ளிகள் தேர்வு மாதத்திலும் பள்ளி சம்பந்தமாக வந்த "யூத்" படம் இளம் ரசிகர்களின் வரவேற்பால் வெற்றி பெற்றுவிட்டது. கோடை விடுமுறை அடுத்த வாரத்தில் ஆரம்பமாக உள்ளது. அடுத்தடுத்து சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன. ஐபிஎல், சட்டமன்றத் தேர்தல் என பரபரப்புகள் இருந்தாலும் வர உள்ள புதிய படங்கள் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
2026 மார்ச் மாதம் வெளியான படங்கள்…
மார்ச் 6
99/66, செல்லமடா நீ எனக்கு, காதல் ரீசெட் ரிபீட், மூரி, முஸ்தபா முஸ்தபா, ஓ பட்டர்பிளை, வடம், வசூல் மன்னன், யார்ரா அந்த பையன் நான்தான் அந்த பையன்
மார்ச் 13
அந்தோணி, திவ்யா, கெளுத்தி, கெணத்த காணோம், கொலைச் சேவல், போலீஸ் பேமிலி, வெஞ்சென்ஸ், வௌவல்ஸ்
மார்ச் 19
யூத்
மார்ச் 27
ஹாப்பி ராஜ், நீ பார்எவெர், சாத்தான் த டார்க்























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!