
மிஸ் கூவாகம் : விழாவில் பங்கேற்ற சீரியல் நடிகைகள்
ஏப் 29, 2022
Advertisement
ஆண்டுதோறும் நடைபெற்று வரும் கூவாகம் திருவிழா இந்த ஆண்டும் சிறப்பாக நடந்து முடிந்தது. கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெறும் திருவிழாவில் கடைசி மூன்று நாட்கள் திருநங்கையர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடுவர். இதுதான் இந்த விழாவின் ஹைலைட். அந்த வகையில் சமீப காலங்களில் திருவிழாவின் ஒருபகுதியாக திருநங்கையர்களில் சிறந்த அழகிகளை தேர்ந்தெடுக்கும் "மிஸ் கூவாகம்" நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த வருடம் "மிஸ் கூவாகம்" நிகழ்ச்சியில் சின்னத்திரையில் முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். பிக்பாஸ் ஜூலி, அபிராமி, சின்னத்திரை நடிகைகளான கேப்ரில்லா செல்லஸ் மற்றும் வந்தனா போன்ற நட்சத்திரங்கள் விழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பட்டத்தை சூட்டி மகிழ்வித்துள்ளனர். இந்நிகழ்ச்சியின் புகைப்படங்களை ஜூலி பகிர்ந்துள்ளார்.
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!