ஓடிடியில் வரவேற்பைப் பெற்றுள்ள லீடர்
ஜூன் 06, 2026
Advertisement
துரை செந்தில்குமார் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில், லெஜண்ட் சரவணன், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப் மற்றும் பலர் நடிப்பில் ஏப்ரல் 3ம் தேதி தியேட்டர்களில் வெளியான படம் "லீடர்".
இப்படம் கடந்த வாரம் மே 29ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. கடந்த ஒரு வாரமாக டாப் 10 டிரென்டிங்கில் இந்தப் படம் இடம் பிடித்துள்ளது. இதுவரையில் 50 மில்லியன் நிமிடங்கள் பார்வைகளைப் பெற்றுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்திற்கு விமர்சனங்கள் பாசிட்டிவ்வாக வந்திருந்தாலும் தியேட்டர்களில் சுமாராகத்தான் ஓடியது. அதே சமயம் ஓடிடி தளத்தில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பலரும் இந்தப் படத்தைப் பாராட்டி தற்போது கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!