
கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால்
அதில் பேசிய நடிகை நிதி அகர்வால், “இந்தியாவின் மிகப் பெரிய நட்சத்திரமான பிரபாஸ் உடன் நடிப்பது எனக்கு ஒரு கனவு நனவானது போல இருக்கிறது. அவர் எவ்வளவு நல்ல மனிதர் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் அவருக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். தெருவில் ஒரு சிக்ஸ் அடிப்பதும், ஸ்டேடியத்தில் ஒரு சிக்ஸ் அடிப்பதும் வெவ்வேறு விஷயங்கள். அந்த அளவுக்கான ரேஞ்ச் கொண்டவர் பிரபாஸ்.
"தி ராஜா சாப்" படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த மாருதிக்கு என் மனமார்ந்த நன்றி. சப்தகிரி, VTV கணேஷ் உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து நடித்தது சந்தோஷமான அனுபவமாக இருந்தது. என் சக நடிகைகளான மாளவிகா மற்றும் ரித்தியுடன் பணியாற்றியது மறக்க முடியாத நினைவாக இருக்கும். தமன் இசையமைத்த பாடல்கள் படத்திற்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளன. "தி ராஜா சாப்" படத்தை அனைவரும் திரையரங்குகளில் கொண்டாடுங்கள்” என்றார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!