ADDED : பிப் 11, 2024 02:43 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் வீடு புகுந்து நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி கொசப்பாளையம் லெனின் வீதியை சேர்ந்தவர் கதிரேசன், 61. இவரது வீட்டில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 20 சவரன் நகைகள் திருடு போயிருந்தது. இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் கதிரேசன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில், விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த மணிகண்டன், 24, என்பவர் நகை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, 20 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.