/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓட்டு திருட்டை கண்டித்து இளைஞர் காங்.,தீப்பந்த ஊர்வலம் ஓட்டு திருட்டை கண்டித்து இளைஞர் காங்.,தீப்பந்த ஊர்வலம்
ஓட்டு திருட்டை கண்டித்து இளைஞர் காங்.,தீப்பந்த ஊர்வலம்
ஓட்டு திருட்டை கண்டித்து இளைஞர் காங்.,தீப்பந்த ஊர்வலம்
ஓட்டு திருட்டை கண்டித்து இளைஞர் காங்.,தீப்பந்த ஊர்வலம்
ADDED : செப் 15, 2025 02:07 AM

புதுச்சேரி: புதுச்சேரி இளைஞர் காங்.,சார்பில் ஓட்டு திருட்டை கண்டித்து தீப்பந்தம் ஊர்வலம் நடந்தது.
இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு நடராஜன் தலைமை தாங்கினார். காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அகில இந்திய இளைஞர் காங்., தலைவர் உதய் பானு சிப், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., காங்., சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ்,முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், முன்னாள் துணை சபாநாயகர் பாலன், மாநில செயலாளர்கள் முத்துக்குமரசாமி, தனுசு, சுரேஷ், முத்துரங்கம், ரகுபதி,மோகன்தாஸ், செந்தில்குமார், பழனி, ராஜகுமார்,இளைஞர் காங்., செயலாளர்கள் ஜோஸ்வா உட்பட பலர் பங்கேற்றனர்.
ஊர்வலம், ராஜிவ் சிலை அருகே துவங்கி காமராஜர் சாலை, நேரு வீதி வழியாக வந்தது. நேரு வீதி - பாரதி வீதி சந்திப்பில் போலீசார் பேரிகார்டு அமைத்து ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர்.
அங்கு மத்திய பா.ஜ., அரசு மற்றும் ஓட்டு திருட்டை கண்டித்து இளைஞர் காங்., நிர்வாகிகள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.
ஏற்பாடுகளை இளைஞர் காங்., நிர்வாகிகள் அஜித், சமீர், மனோஜ், ஜெய், ஜனா, அபிலாஷ், கமலேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.