/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஏழை மருத்துவ மாணவருக்கு கலெக்டர் ரூ.2 லட்சம் நிதியுதவி ஏழை மருத்துவ மாணவருக்கு கலெக்டர் ரூ.2 லட்சம் நிதியுதவி
ஏழை மருத்துவ மாணவருக்கு கலெக்டர் ரூ.2 லட்சம் நிதியுதவி
ஏழை மருத்துவ மாணவருக்கு கலெக்டர் ரூ.2 லட்சம் நிதியுதவி
ஏழை மருத்துவ மாணவருக்கு கலெக்டர் ரூ.2 லட்சம் நிதியுதவி
ADDED : செப் 15, 2025 02:07 AM
புதுச்சேரி: அரசு பள்ளியில் படித்து மருத்துவத்தில் சேர்ந்த மாணவருக்கு ரூ.2 லட்சம் நிதி உதவியைகலெக்டர் குலோத்துங்கன் வழங்கினார்.
கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்தவர் அய்யனார். இவரது மகன் ராஜகுரு, அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வரை படித்தார். நீட் தேர்வில் 147 மதிப்பெண்கள் பெற்று, அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., சேர இடம் கிடைத்தது.
அரசு ரூ. 4 லட்சம் கல்விக் கட்டணம் செலுத்தியநிலையில் மாணவருக்கு கூடுதலாக புத்தகம், கிளினிக்கல், சீருடை கட்டணமாக ரூ. 2 லட்சம் தேவைப்பட்டது.
மாணவரின் தந்தை மாற்றுத்திறனாளி என்பதால், அவரின் மருத்துவ படிப்பிற்கு தேவையான கட்டணத்தை வழங்குவதற்காக சென்டாக் மாணவர், பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி, கார்த்திகேயன் ஆகியோர்நிதி திரட்டினர்.
அதன்படி திரட்டப்பட்ட நிதியை கலெக்டர் குலோத்துங்கன், ராஜகுரு வீட்டிற்கு நேரில் சென்று வழங்கினார்.
தொடர்ந்து, மாணவனுக்கான விடுதி கட்டணத்தை ஏற்பதாக உறுதியளித்தார்.