/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வாலிபர் கொலை வழக்கு : சிறுவன் உட்பட 4 பேர் கைதுவாலிபர் கொலை வழக்கு : சிறுவன் உட்பட 4 பேர் கைது
வாலிபர் கொலை வழக்கு : சிறுவன் உட்பட 4 பேர் கைது
வாலிபர் கொலை வழக்கு : சிறுவன் உட்பட 4 பேர் கைது
வாலிபர் கொலை வழக்கு : சிறுவன் உட்பட 4 பேர் கைது
ADDED : ஜன 17, 2024 08:39 AM

வில்லியனுார் : வில்லியனுாரில் முன் விரோதத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வில்லியனுார் அடுத்த உறுவையாறு பேட்டை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் தனபால்,22; இவரை கடந்த 14ம் தேதி இரவு மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது.
இதுகுறித்து வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து, இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், முன்விரோதத்தில் அதேபகுதியை சேர்ந்த நாகப்பன் மகன் ஞானபிரகாஷ், 24; தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தனபாலை வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது.
அதன்பேரில், பொறையூர் பேட்டில் பதுங்கியிருந்த ஞானபிரகாஷ், 22; அங்காளன் மகன் ஜீவா, 24; சந்திரசேகர் மகன் சந்துரு, 21; மற்றும் 17 வயதுடைய சிறுவன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.
மேலும், அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் நான்கு பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஞானபிரகாஷ் உள்ளிட்ட மூவரை சிறையிலும், 17 வயது சிறுவனை அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.
இவ்வழக்கில் மேலும் தொடர்புடைய மூவரை தேடிவருகின்றனர்.


