ADDED : ஜூன் 22, 2025 02:11 AM

புதுச்சேரி : ராஜ்பவன் தொகுதி குருசுகுப்பம் பிரான்சிஸ் அசிசி அரசு உதவி பெறும் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா நடந்தது.
ராமலிங்கம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுடன் இணைந்து, யோகாசனங்கள் செய்தனர்.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், தொகுதி பொறுப்பாளர் ஆனந்த கண்ணன், சீனிவாச பெருமாள், நகர மாவட்ட துணைத் தலைவர் ஆனந்த பாஸ்கர், ஜான் பிரகாஷ், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.