/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கமல சாயிபாபா கோவிலில் 108 கலச அபிேஷகம் கமல சாயிபாபா கோவிலில் 108 கலச அபிேஷகம்
கமல சாயிபாபா கோவிலில் 108 கலச அபிேஷகம்
கமல சாயிபாபா கோவிலில் 108 கலச அபிேஷகம்
கமல சாயிபாபா கோவிலில் 108 கலச அபிேஷகம்
ADDED : ஜூன் 22, 2025 02:11 AM

புதுச்சேரி : புதுச்சேரி, பிள்ளைச்சாவடி, இ.சி.ஆர்., சீரடி சாயிபாபா நகரில், கமல சாயிபாபா கோவில் அமைந்துள்ளது. கோவிலில், சீரடி சாயிபாபா பிரார்த்தனை மண்டப 23வது ஆண்டு விழாவையொட்டி, 108 கலச அபிேஷக விழா கடந்த 19ம் தேதி துவங்கியது.
அதையொட்டி, அன்று காலை கொடியேற்றம், மாலை கோ பூஜை, நேற்று முன்தினம் வடுக பூஜை, சுவாசினி பூஜை, கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, குரு பூஜை நடந்தது. மாலை முதற்கால யாக சாலை பூஜை, தேவதா அனுக்ஞை யஜமான அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கலச ஸ்தாபம், மகா சங்கல்பம் நடந்தது.
முக்கிய நிகழ்வாக, நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, அக்னி கார்யம், மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை, கடம் புறப்பாடு, 108 கலச அபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து, பல்லக்கு உற்சவம், ஆரத்தி நடந்தது. திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.