/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா
ADDED : ஜூன் 07, 2025 02:48 AM

புதுச்சேரி: மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சகத்தின் இந்திய விலங்கியல் ஆய்வு மையம் மற்றும் இந்திய அரசின் அந்தமான் நிகோபர் பிராந்திய மையம் இணைந்து உலக சுற்றுச்சூழல் தின விழாவை புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடத்தியது.
இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனம் கூடுதல் இயக்குனர் சிவராமன் வரவேற்றார். பல்கலைக்கழக துணை வேந்தர் பிரகாஷ்பாபு தலைமை தாங்கி, பேசுகையில், 'அந்தமான் நிகோபர் தீவுகள் மாசு படாததால், சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் பொறுப்பான சுற்றுலாவின் தேசிய மாதிரியாக செயல்படுகிறது. மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் ஏற்படுத்தும் ஆபத்துகள், ஒருமுறை மட்டும் உபயோகிக்கக் கூடிய பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதை குடிமக்கள் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் குடும்பங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பள்ளிகள், வீடுகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் இல்லாத நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்' என்றார்.
நிகழ்ச்சியில், இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் முன்னாள் இயக்குநர் ராமகிருஷ்ணா, அந்தமான் நிக்போர் தீவுகளின் வேளாண் இயக்குனர் பல்லவி சர்கார், கூடுதல் இயக்குநர் லால்ஜி சிங், இந்திய தாவரவியல் ஆய்வு அமைப்பின் கூடுதல் இயக்குநர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.