/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கவர்னர், முதல்வர் பக்ரீத் வாழ்த்து கவர்னர், முதல்வர் பக்ரீத் வாழ்த்து
கவர்னர், முதல்வர் பக்ரீத் வாழ்த்து
கவர்னர், முதல்வர் பக்ரீத் வாழ்த்து
கவர்னர், முதல்வர் பக்ரீத் வாழ்த்து
ADDED : ஜூன் 07, 2025 02:48 AM
புதுச்சேரி, : பக்ரீத் பண்டிகையொட்டி கவர்னர், முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கவர்னர் கைலாஷ்நாதன் வாழ்த்து செய்தியில் மனித குலத்தின் மேன்மைக்காக, நபிகள் நாயகம் போதித்த தியாகம், சகோதரத்துவம், அன்பு, ஈகை ஆகிய நெறிகளைப் பின்பற்றி நாம் அனைவரும் அறவழியில் நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த நாள் உணர்த்துகிறது.
உலகில் அன்பும், அமைதியும் தழைத்திட அனைவரும் மனிதநேயம் மற்றும் சகோதரத்துவச் சிந்தனையோடு வாழ வேண்டும். அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருக வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
முதல்வர் ரங்கசாமி வாழ்த்து செய்தியில், மனித குலம் தழைப்பதற்கு தியாக உணர்வும், ஈகை குணமும், இன்றியமையாதவை என்பதை தனது வாழ்வின் மூலமாக இறை துாதரான நபிகள் நாயகம் எடுத்துரைத்தார். அல்லாவின் மீது அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பு, ஆழமான பக்தியின் வெளிப்பாட்டை இந்நாள் நினைவூட்டுகின்றது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அமைச்சர் லட்சுமிநாராயணன், எதிர்கட்சி தலைவர் சிவா, காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன், துணை செயலாளர் வையாபுரிமணிகண்டன், அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு செயலாளர் ஓம்சக்திசேகர், அகில இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் பங்காரு சாயுபு உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.