Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பெண்கள் கிரிக்கெட் போட்டி: ஏஞ்சல்ஸ், டைமண்ட்ஸ் அணிகள் வெற்றி

பெண்கள் கிரிக்கெட் போட்டி: ஏஞ்சல்ஸ், டைமண்ட்ஸ் அணிகள் வெற்றி

பெண்கள் கிரிக்கெட் போட்டி: ஏஞ்சல்ஸ், டைமண்ட்ஸ் அணிகள் வெற்றி

பெண்கள் கிரிக்கெட் போட்டி: ஏஞ்சல்ஸ், டைமண்ட்ஸ் அணிகள் வெற்றி

ADDED : ஜூன் 07, 2024 06:49 AM


Google News
புதுச்சேரி : புதுச்சேரியில் பெண்களுக்கான, 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில், ஏஞ்சல்ஸ் மற்றும் டைமண்ட்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.

கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம்., நிறுவனம் இணைந்து நடத்தும் பெண்களுக்கான, 10 ஓவர் கிரிக்கெட் போட்டி, நேற்று துவங்கியது. போட்டி புதுச்சேரி, துத்திப்பட்டு மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் ஏஞ்சல்ஸ், குயின்ஸ், பிரின்சஸ், டைமண்ட்ஸ் என, நான்கு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த போட்டிகளை, 'பேன்கோடு ஆப்'பில், நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டி தொடரை, நேற்று காலை 7:30 மணிக்கு, கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி தலைவர் தாமோதரன் துவங்கி வைத்தார். விழாவில் சீகெம் நிறுவன தலைவர் பத்மா, கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரியின் கவுரவ செயலாளர் ராமதாஸ் மற்றும் சி.ஏ.பி., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.நேற்று காலை 8:45 மணிக்கு துவங்கிய முதல் போட்டியில், ஏஞ்சல்ஸ் அணியும், குயின்ஸ் அணியும் மோதின. முதலில் ஆடிய ஏஞ்சல்ஸ் அணி, 10 ஓவர்களில், 2 விக்கெட்டுகள் இழந்து, 83 ரன்கள் அடித்தது. தொடர்ந்து ஆடிய குயின்ஸ் அணி 10 ஓவர்களில், 4 விக்கெட்டுகள் இழந்து, 62 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.இந்த போட்டியில், ஏஞ்சல்ஸ் அணி, 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியை சேர்ந்த யுவஸ்ரீ ஆட்டநாயகி விருது பெற்றார். காலை 11:00 மணிக்கு நடந்த, இரண்டாவது போட்டியில் பிரின்சஸ் மற்றும் டைமண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் ஆடிய டைமண்ட்ஸ் அணி, 10 ஓவர்களில், 4 விக்கெட்டுகள் இழந்து 76 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பிரின்சஸ் அணி, 10 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும், இழந்து 60 ரன்கள் மட்டுமே எடுத்து, தோல்வி அடைந்தது. இந்த போட்டியில், டைமண்ட்ஸ் அணி, 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில், 30 ரன்கள் அடித்து, 3 விக்கெட்டுகள் கைப்பற்றிய டைமண்ட்ஸ் அணியின் பூனம் ஆட்டநாயகி விருது பெற்றார். இறுதிப் போட்டிகள் வரும், 12,ம் தேதி நிறைவு பெறுகின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us