/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இலவச மருத்துவ முகாம் சிவா துவக்கி வைப்புஇலவச மருத்துவ முகாம் சிவா துவக்கி வைப்பு
இலவச மருத்துவ முகாம் சிவா துவக்கி வைப்பு
இலவச மருத்துவ முகாம் சிவா துவக்கி வைப்பு
இலவச மருத்துவ முகாம் சிவா துவக்கி வைப்பு
ADDED : ஜூன் 07, 2024 06:49 AM
புதுச்சேரி : தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, புதுச்சேரி தி.மு.க., மருத்துவர் அணி சார்பில், எல்.கே.
நர்சிங் ஹோம் மற்றும் லட்சுமிநாராயணா மருத்துவமனையுடன் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடந்தது.மகாவீர் நகரில் உள்ள எல்.கே. நர்சிங் ஹோமில் நடந்த முகாமிற்கு மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் ஆனந்த் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். தொகுதி தி.மு.க., செயலாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி வரவேற்றார்.இலவச மருத்துவ முகாமை, தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.தொடர்ந்து நடந்த மருத்துவ முகாமில் லட்சுமிநாராயணா மருத்துவமனை மருத்துவக் குழுவினர், பொது மருத்துவம், இதயவியல், நரம்பியல், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நலம் உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை அளித்தனர்.முகாமில் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.நிகழ்ச்சியில் மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், தொகுதி செயலாளர் வடிவேல், சீனு மோகன்தாஸ், இளைஞரணி துணை அமைப்பாளர் நித்தீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.