/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் புதுச்சேரி தேர்தல் துறைக்கு வருகை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் புதுச்சேரி தேர்தல் துறைக்கு வருகை
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் புதுச்சேரி தேர்தல் துறைக்கு வருகை
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் புதுச்சேரி தேர்தல் துறைக்கு வருகை
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் புதுச்சேரி தேர்தல் துறைக்கு வருகை
ADDED : செப் 01, 2025 06:57 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் துறை அலுவலகத்திற்கு வந்துள்ளது.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் (2026) அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் படி, வாக்காளர்கள் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.
புதுச்சேரியை பொறுத்தவரை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 10 லட்சத்து 14 ஆயிரத்து 397 வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேர்தல் தாயார் நிலை, தேர்தல் தொடர்பான ஆயத்த நிலைகள், முன்னேற்பாடுகள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய அறிவுறுத்தல்கள், தேர்தல் பதிவு அதிகாரிகள், ஓட்டுச்சாவடி அதிகாரிகளை தேர்ந்தெடுப்பது, அரசியல் கட்சி முகவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரிக்கு புதிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் (இ.வி.எம்), வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சாதனங்கள் (வி.வி.பாட்) கொண்டு வரப்பட்டுள்ளன.
பெங்களூரு பெல் நிறுவனத்திருடமிருந்து கொண்டுவரப்பட்ட 480 பேலட் யூனிட்ஸ், 260 கண்ட்ரோல் யூனிட்ஸ், 980 வி.பி.பாட் இயந்திரங்கள் ரெட்டியார்பாளையத்தில் அமைந்துள்ள தேர்தல் துறை அலுவலக வளாகத்தில் உள்ள இ.வி.எம். பாதுகாப்பு அறையில் மாநில தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், அனைத்து இயந்திரங்களும் ஆய்வு செய்யப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன.