ADDED : செப் 01, 2025 06:58 AM
புதுச்சேரி : பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
மூலக்குளம் தக்ககுட்டை பகுதியில், வாலிபர் ஒருவர், அவ்வழியாக செல்லும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டுவதாக, ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் அங்கு நின்ற வாலிபரை பிடித்து, விசாரித்தனர்.
அதில், ஜே.ஜே., நகரை சேர்ந்த கில்பர்ட், 26; என்பது தெரியவந்தது.
போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து கைது செயதனர்.