/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் மருத்துவக் குழுவினர் ஆய்வுமாணவர்களுக்கு வாந்தி மயக்கம் மருத்துவக் குழுவினர் ஆய்வு
மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் மருத்துவக் குழுவினர் ஆய்வு
மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் மருத்துவக் குழுவினர் ஆய்வு
மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் மருத்துவக் குழுவினர் ஆய்வு
ADDED : ஜன 11, 2024 04:09 AM
திருக்கனுார்: மணலிப்பட்டு அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது குறித்து மருத்துவக் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
புதுச்சேரி, மணலிப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் முட்டையுடன் கூடிய மதிய உணவு சாப்பிட்ட 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென வயிற்று வலி ஏற்பட்டு, வாந்தி எடுத்து, மயக்கம் அடைந்தனர்.
இதையடுத்து, மாணவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு ஆசிரியர்கள் அழைத்து சென்று சிகிச்சை அளித்து, வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும், மண்ணாடிப்பட்டு, கூனிச்சம்பட்டு அரசு பள்ளி மாணவர்கள் சிலருக்கும், மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதுகுறித்து பள்ளி கல்வித்துறை விசாரணை நடத்திய நிலையில், நேற்று திருக்கனுார் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினர் மணலிப்பட்டு அரசு பள்ளியில் ஆய்வு செய்தனர்.
அப்போது, உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை பார்வையிட்ட மருத்துவக்குழுவினர், அவர்களிடம் தற்போதிய உடல் நலம் குறித்து பரிசோதனை செய்தனர்.
மேலும், பள்ளி வளாகத்தை சுற்றிலும் உணவு கழிவுநீர், குப்பைகள் தேங்கியுள்ளதா என ஆய்வு செய்தனர்.