/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/விவேகானந்தரின் 162வது பிறந்த நாள் விழா: திருபுவனை மேல்நிலைப் பள்ளியில் கொண்டாட்டம்விவேகானந்தரின் 162வது பிறந்த நாள் விழா: திருபுவனை மேல்நிலைப் பள்ளியில் கொண்டாட்டம்
விவேகானந்தரின் 162வது பிறந்த நாள் விழா: திருபுவனை மேல்நிலைப் பள்ளியில் கொண்டாட்டம்
விவேகானந்தரின் 162வது பிறந்த நாள் விழா: திருபுவனை மேல்நிலைப் பள்ளியில் கொண்டாட்டம்
விவேகானந்தரின் 162வது பிறந்த நாள் விழா: திருபுவனை மேல்நிலைப் பள்ளியில் கொண்டாட்டம்
ADDED : ஜன 13, 2024 07:33 AM

திருபுவனை : புதுச்சேரி அடுத்த திருபுவனை சுவாமி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் சுவாமி விவேகானந்தரின் 162வது பிறந்த நாள் விழா மற்றும் தேசிய இளைஞர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
திருபுவனை பழண்டி மாரியம்மன் கோவில் அருகில் துவங்கிய சுவாமி விவேகானந்தரின் ரதயாத்திரையை, விழுப்புரம் ராமகிருஷ்ணா மடம் சுவாமி ஷிவகண்டநந்தாஜி மகராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ரத யாத்திரையில் பங்கேற்ற மாணவ, மாணவி கள் விவேகானந்தரின் பாடல்கள் மற்றும் போதனைகளை பாடியபடி சென்றனர். பின், யாத்திரை பள்ளி வளாகத்தை சென்ற டைந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு விழுப்புரம் ராமகிருஷ்ணா மடம் சுவாமி ஷிவகண்டநந்தாஜி மகராஜ் தலைமை தாங்கி, அருளாசி வழங்கினார்.பள்ளி தாளாளர் சீனிவாசன் வரவேற்றார்.
புதுச்சேரி 'தினமலர்' வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், பள்ளி வளாகத்தில் உள்ள சுவாமி விவேகானந்தரின் முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
புதுச்சேரி ராமகிருஷ்ணா மடம் சுவாமி நரவாரநந்தா மகராஜ், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சத்யகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
பள்ளி முதல்வர் மைலன் நன்றி கூறினார்.