Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/26ம் தேதி கிராம சபை கூட்டம்

26ம் தேதி கிராம சபை கூட்டம்

26ம் தேதி கிராம சபை கூட்டம்

26ம் தேதி கிராம சபை கூட்டம்

ADDED : ஜன 19, 2024 10:52 PM


Google News
நெட்டப்பாக்கம், -நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் செய்திக்குறிப்பு:

நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்தை சேர்ந்த 11 கிராம பஞ்சாயத்துகளில் குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 26ம் தேதி காலை 10:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடக்கிறது.

இதில், நெட்டப்பாக்கம் - சிவன் கோவில் திடல், கல்மண்டபம் சமுதாய நலக்கூடம், சூரமங்கலம் கலையரங்கம், ஏரிப்பாக்கம் - நத்தமேடு அரசு தொடக்கப் பள்ளி, கரிக்கலாம்பாக்கம் ராஜிவ்காந்தி திருமண மண்டபம், மடுகரை கிழக்கு சிவன் கோவில் திடல், மடுகரை மேற்கு அரசு தொடக்கப் பள்ளி மைதானம், ஏம்பலம் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானம், செம்பியப்பாளையம் கோவில் திடல், கரியமாணிக்கம் விவசாயப் பண்ணை வளாகம், கோர்க்காடு அரசு தொடக்கப்பள்ளி மைதானம் ஆகிய பகுதிகளில் நடக்கிறது.

பொதுமக்கள், மகளிர் குழு, கிராம வளர்ச்சி சங்க உறுப்பினர்கள், இளைஞர்கள் கூட்டத்தில் பங்கேற்று, கிராம வளர்ச்சிக்கான திட்ட வரைவு அறிக்கை, தங்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us