/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வித்யா பவன் மேல்நிலை பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை வித்யா பவன் மேல்நிலை பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
வித்யா பவன் மேல்நிலை பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
வித்யா பவன் மேல்நிலை பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
வித்யா பவன் மேல்நிலை பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
ADDED : மே 18, 2025 02:42 AM

புதுச்சேரி: தேங்காய்த்திட்டு, வித்யா பவன் மேல்நிலைப்பள்ளி மாநில அளவில் 2ம் இடம் பிடித்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளது.
தொடர்ந்து 15 ஆண்டுகளாக பள்ளி அளவிலான தேர்வு முடிவுகளில் பல வெற்றிகளை கண்ட பள்ளி, இம்முறை மாநில அளவிலான மதிப்பெண்ணை பெற்று சாதனை படைத்துள்ளது.
மாணவி கிருத்திகா 496 மதிப்பெண்கள், பெற்று சிறப்பிடம் பிடித்தார். அவர், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மாணவர்கள்ஹரிஷ், மோனிஷ் ஆகியோர் 487 மதிப்பெண், மாணவிகள் ஜனுஷா, ஷாலினி ஆகியோர் 485 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்தனர். பள்ளியில் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் வெற்றி பெற்றனர். மாணவர்கள் கிருத்திகா, ஜனுஷா, மோனிஷ் ஆகியோர் அறிவியல் பாடத்திலும், மாணவர்கள் கிருத்திகா, ஜனுஷா, மோனிஷ், லாவண்யா, நித்யஸ்ரீ, ராகவி, ஷாஹினா மற்றும் கீர்த்தனன் பெர்னியர் ஆகியோர் சமூக அறிவியல் பாடத்திலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தேர்வில் 450 மதிப்பெண்களுக்கு மேல் 20 பேரும், 400க்கு மேல் 50 பேரும், பெற்றுள்ளனர்.
பள்ளியின் வெற்றிக்கு காரணமான மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் பள்ளியின் முதல்வர் ரேகா, சேர்மன் ராஜசேகரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பிளஸ் 1 சேர்க்கையில் சலுகைகள் வழங்கினர்.