Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலையில் இரங்கல் பேனர் வைக்க தடை உழவர்கரை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சாலையில் இரங்கல் பேனர் வைக்க தடை உழவர்கரை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சாலையில் இரங்கல் பேனர் வைக்க தடை உழவர்கரை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சாலையில் இரங்கல் பேனர் வைக்க தடை உழவர்கரை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

ADDED : மே 31, 2025 11:42 PM


Google News
புதுச்சேரி:இறுதி ஊர்வலங்களின்போது மாலைகளை சாலையில் வீசினால் இறப்பு பதிவின்போது அபராதம் விதிக்கப்படும் என,உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் எச்சரித்துள்ளார்.

அவர்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சவ ஊர்வலங்களின் போது போக்குவரத்திற்கு இடையூறாக பொது இடங்களில் மலர்கள், மாலைகள் வீசுவது, பட்டாசு வெடிப்பது, அனுமதியின்றி சாலைகளில் இரங்கல் பேனர்கள் வைக்க கூடாது என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்களுக்கு விபத்து, இடையூறு ஏற்படுவதால் இத்தகைய செயல்களை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது. மேலும் பொது மக்களிடமிருந்தும், சமூக ஆர்வலர்களிடமிருந்தும் இதனை தவிர்க்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உழவர்கரை நகராட்சிக்கு தொடர்ந்து வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

பொதுமக்களின் உயிர் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இறந்தவர்களின் உடல் மீது சார்த்தப்படும் மாலைகள், மலர் வளையங்களை இறுதி ஊர்வலத்தின் போது சாலையில் வீசாமல் இடுகாட்டில் ஓரமாக வைக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு இடையூறாக பட்டாசுகள் வெடிப்பது, அனுமதியின்றி, சாலைகளில் பேனர் வைப்பது தவிர்க்க வேண்டும். மீறினால் இறப்பு பதிவின்போது உரிய அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us