Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சென்னைக்கு அடுத்த 6 ஆண்டுகளில் இந்தியா விண்வெளி பொருளாதாரம் பத்து மடங்காக உயரும் புதுச்சேரியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல் 

சென்னைக்கு அடுத்த 6 ஆண்டுகளில் இந்தியா விண்வெளி பொருளாதாரம் பத்து மடங்காக உயரும் புதுச்சேரியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல் 

சென்னைக்கு அடுத்த 6 ஆண்டுகளில் இந்தியா விண்வெளி பொருளாதாரம் பத்து மடங்காக உயரும் புதுச்சேரியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல் 

சென்னைக்கு அடுத்த 6 ஆண்டுகளில் இந்தியா விண்வெளி பொருளாதாரம் பத்து மடங்காக உயரும் புதுச்சேரியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல் 

ADDED : ஜூலை 01, 2025 02:11 AM


Google News
புதுச்சேரி : இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் அடுத்த 6 ஆண்டுகளுக்குள் 10 மடங்காக உயரும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசினார்.

இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் தெற்கு பிராந்திய மாநாடு புதுச்சேரி பல்கலையில் நேற்று நடந்தது. கருத்தரங்கில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய பணியாளர் மற்றும் பொது குறைகள் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், டிஜிட்டல் இந்தியாவில் குடிமக்களை மேம்படுத்துதல், நிர்வாகம், மேலாண்மை மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் பேசியதாவது:

கடந்த 11 ஆண்டுகளில் மத்திய அரசு துவக்கி வைத்த பல்வேறு சீர்திருத்த நடவடிக்கையால் நாடு வேகமான வளர்ச்சியை நோக்கி சென்றுக் கொண்டுள்ளது. இதனால், மக்களின் சமூக கண்ணோட்டமும் மாறியுள்ளது. இப்போது தன்னம்பிக்கையுடனும் கண்ணியத்துடனும் உணரும் ஒரு சமூக கண்ணோட்டத்தை மக்கள் கொண்டுள்ளனர்.

கொரோனா காலத்திற்கு பிறகு நாட்டில் டிஜிட்டல் துறையில் ஏற்பட்ட மாற்றம் அளப்பரியது. நம் நாடு எடுத்துள்ள முக்கிய முயற்சிகள், சீர்திருத்தங்கள் நிர்வாகத்துடன் மட்டுமல்ல, சமூக கண்ணோட்டத்தைப் பற்றியது. நாட்டைப் பற்றி மக்கள் இப்போது அதிக நம்பிக்கையுடன் உள்ளனர்.

முன்பு வங்கி கணக்கு ஆரம்பிப்பது பெரிய விஷயம். எனக்கே அந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது. இப்போது அப்படி இல்லை. 80 சதவீத இந்தியர்களிடம் வங்கிக் கணக்கு உள்ளது. கடந்த 11 ஆண்டுகளில், 55.22 கோடி வங்கிக் கணக்குகள் உருவாக்கப்பட்டன. பல்வேறு திட்டங்களின் கீழ், நேரடி பலன் பரிமாற்ற முறை மூலம் பயனாளிகளுக்கு 44 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசாங்கத்தினால் மாற்ற முடிந்தது , நாட்டில் உள்ள பல்வேறு வளங்களில் நாம் தனி கவனம் செலுத்தி வருகின்றோம். பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதில் விண்வெளி மற்றும் கடல் ஆகியவை சாத்தியமான துறைகளாக உள்ளன.

சர்வதேச விண்வெளி நிலையங்களுக்கான குழுத் தலைவர் சுபன்ஷு சுக்லாவின் பயணம், விண்வெளி துறையில் இந்தியாவின் முக்கிய பங்களிப்பினை வெளிப்படுத்தியுள்ளது. நமது விண்வெளிப் பொருளாதாரம் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காண உள்ளது. தற்போது 8 மில்லியன் டாலராக இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் அதிகரித்துள்ளதுடன், உலகின் முக்கிய இடத்தினை பிடித்துள்ளது.

பிற நாடுகளையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் 10 மடங்கு வளர்ச்சியைக் காணும்.

வளர்ந்த நாட்டை நோக்கிய நம் நாட்டின் பயணத்தில் முக்கிய மைல்கல் இது. ஆராயப்படாதவற்றை நாடு எவ்வாறு சிறப்பாக ஆராய முடிந்தது என்பதுதான் விண்வெளி பொருளாதாரத்தின் சிறப்பு.

இவ்வாறு மத்திய அமைச்சர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us