/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 100 நாள் திட்ட பணியாளர்கள் திடீர் சாலை மறியல் 100 நாள் திட்ட பணியாளர்கள் திடீர் சாலை மறியல்
100 நாள் திட்ட பணியாளர்கள் திடீர் சாலை மறியல்
100 நாள் திட்ட பணியாளர்கள் திடீர் சாலை மறியல்
100 நாள் திட்ட பணியாளர்கள் திடீர் சாலை மறியல்
ADDED : ஜூலை 01, 2025 02:11 AM

பாகூர் : குடியிருப்புபாளையத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட குடியிருப்புபாளையம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் நேற்று காலை குடியிருப்புபாளையம் பஸ் நிறுத்த பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பாகூர் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று, தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பணியாளர்கள் தரப்பில்'' 100 நாள் வேலை திட்டத்தில் எங்களுக்கு குறைந்த நாட்களே வேலை வழங்கப்படுகிறது.
அப்படியே வேலை கொடுத்தாலும், புறவழிச் சாலையை கடந்து நீண்ட துாரத்தில் உள்ள கழிவு நீர் வாய்க்காலை துார்வார அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். தங்கள் கிராம எல்லை பகுதியில் உள்ள ஏரிகள், தாங்கல், குளம் பாசன வாய்க்கால்கள் துார்வாரப்படாமல் உள்ளதாக குற்றம் சாட்டினர்.'' போலீசார், இது குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து, பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.