ADDED : மே 07, 2026 03:52 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதி பெத்துசெட்டிப்பேட் பள்ளிக்கூட வீதியில் உள்ள பாதாள சாக்கடை அடைப்பினை சிவக்கொழுந்து முயற்சியின் மூலம் அகற்றப்பட்டது.
லாஸ்பேட்டை தொகுதியில் என்.ஆர்.காங்., வேட்பாளராக போட்டியிட்டு சிவக்கொழுந்து வெற்றி பெற்றார்.
இந்தநிலையில் பெத்துச்செட்டிபேட்டை பள்ளிக்கூட வீதியில் கழிவுநீர் வாய்க்கால் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வெளியேறி, துர்நாற்றம் வீசியது.
இதனையறிந்த சிவக்கொழுந்து அங்கு சென்று சமந்தப்பட்ட ஊழியர்களை வரவழைத்து'கம்ப்ரஷர்' வாகனம் மூலம் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்புகளை அகற்றி, சீரமைத்தார். விரைந்து நடவடிக்கை எடுத்த சிவக்கொழுந்துவை, அப்பகுதி மக்கள் பாராட்டினர்.





