ADDED : மே 07, 2026 03:50 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: நெல்லித்தோப்பில் ரூ.75 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, உரிமையாளரை கைது செய்தனர்.
நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வருவதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் குமரவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்குள்ள பெட்டிக் கடையில் சோதனை செய்தனர். அப்போது, கடையில் ரூ.75 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைகாக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் லாஸ்பேட்டை, திரவுபதியம்மன் கோவில் வீதியை சேர்ந்த மணிமாறன், 62, மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.





