ADDED : ஜூன் 01, 2025 11:46 PM
பாகூர்: பாகூர் போலீசார் நேற்று முன்தினம் மணமேடு பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள நடுநிலைப்பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
அங்கு சென்ற போலீசார், சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அவர், மணமேடு கிராமத்தை சேர்ந்த ஜெயபால் 62; என்பதும், அவர் கட்டை பையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்தது தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், கரையாம்புத்துார் அரசு நடுநிலைப்பள்ளி அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்த விழுப்புரம் மாட்டம், கலர் பகுதியை சேர்ந்த பிரேமா, 45, என்பவரை, கரையாம்புத்துார் போலீசார் கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.