ADDED : ஜூன் 01, 2025 11:46 PM
பாகூர்: பாகூர் அடுத்த அரங்கனுார் ஐயனார் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலசுந்தரம், 48; டிரைவர். இவரது மனைவி சிவகாமி, 38. இரண்டு மகள்கள் உள்ளனர். பாலசுந்தரம் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு வீட்டிற்கு சென்ற பாலசுந்தரம், சிவகாமியிடம் ஆம்லெட் போட்டு தருமாறு கேட்டுள்ளார். அதற்கு, சிவகாமி சிலிண்டர் காலியாகி விட்டது.
தனது தாய் வீட்டில் இருந்து காஸ் சிலிண்டர் கொண்டு வந்து ஆம்லெட் போட்டு தருகிறேன் எனக் கூறி வெளியே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, பாலசுந்தரம் வீட்டில் துாக்கில் தொங்கினார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு, கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். சிவகாமி அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.