ADDED : ஜூன் 22, 2025 02:24 AM

புதுச்சேரி : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, லாஸ்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் இயற்கை மருத்துவ முறை இணைந்து யோகா மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை நடத்தின.
டாக்டர் சிந்துஜா சிந்துஜா பிரியா வரவேற்றார். லாஸ்பேட்டை மருத்துவ அதிகாரிகள் பத்மினி, டாக்டர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பளராக வைத்தியநாதன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, யோகசான நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, அனைவருடன் சேர்ந்து யோகாசனம் செய்தார். தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
ஏற்பாடுகளை டாக்டர்கள் கவுசிகா, சாந்தி, பெண் சுகாதார மேற்பார்வையாளர் ராதா, முத்து ஆகியோர் செய்திருந்தனர். டாக்டர் ரொமேனோ நன்றி கூறினார்.