/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/திருக்காஞ்சி தேர் திருவிழா: அமைச்சர் துவக்கி வைப்புதிருக்காஞ்சி தேர் திருவிழா: அமைச்சர் துவக்கி வைப்பு
திருக்காஞ்சி தேர் திருவிழா: அமைச்சர் துவக்கி வைப்பு
திருக்காஞ்சி தேர் திருவிழா: அமைச்சர் துவக்கி வைப்பு
திருக்காஞ்சி தேர் திருவிழா: அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : பிப் 24, 2024 06:34 AM

வில்லியனுார் : திருக்காஞ்சி மாசிமக தீர்த்தவாரி தேர் திருவிழாவில், வேளாண் அமைச்சர் வடம் பிடித்து துவக்கி வைத்தார்.
வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சியில் பிரசித்திபெற்ற கங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாக தீர்த்தவாரி நிகழ்ச்சி விமர்சையாக நடப்பது வழக்கம். இந்தாண்டு மாசி மக தீர்த்தவாரி உற்சவ விழா கடந்த15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் விழாவில், முக்கிய நிகழ்வாக கடந்த 17ம் தேதி மாலை அதிகார நந்தி சேவை, 18ம் தேதி பரிவேட்டை, 22ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
நேற்று (23ம் தேதி) தேர் திருவிழாவை முன்னிட்டு காலை 9:30 மணியளவில் வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார், தேரோட்டத்தை வடம் பிடித்து துவக்கி வைத்தார். திருக்காஞ்சி மாட வீதிகள் வழியாக சென்ற தேர், மீண்டும் பிற்பகல் 1:00 மணியளவில் நிலையை வந்தடைந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
முக்கிய விழாவாக இன்று (24ம் தேதி) காலை 7:30 மணிக்கு மேல் மாசிமக தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. விழாவில் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சங்கராபரணி ஆற்றங்கரை பகுதியில் அதிகாலை முதலே தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவர்.
ஏற்பாடுகளை கோவில் தலைமை குருக்கள் சரவண சிவாச்சார்யார் மற்றும் உற்சவதாரர்கள், விழாக்குழுவினர் செய்து வருன்றனர்.