ADDED : மே 21, 2025 11:14 PM

புதுச்சேரி: புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் திருக்குறளை தேசிய நுால் எனும் கோரிக்கையை வலியுறுத்தி 'திருக்குறள் கூறும் நிகழ்ச்சி' நடந்தது.
தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலர் சீனு மோகன்தாசு வரவேற்றார். வேளாண் துறை இயக்குநர் வசந்தகுமார் பங்கேற்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வினை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், தமிழ்ச் சங்கப் பொருளாளர் அருள்செல்வம், துணைத் தலைவர் திருநாவுக்கரசு, துணைச் செயலர் தினகரன், பாலசுப்ரமணியன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உசேன், சிவேந்திரன், ஆனந்தராசன், பொற்செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.