/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூவர் உயிரிழப்பிற்கு அரசே பொறுப்பு : எதிர்கட்சித்தலைவர் குற்றச்சாட்டு தி.மு.க., அமைப்பாளர் சிவா குற்றச்சாட்டு மூவர் உயிரிழப்பிற்கு அரசே பொறுப்பு : எதிர்கட்சித்தலைவர் குற்றச்சாட்டு தி.மு.க., அமைப்பாளர் சிவா குற்றச்சாட்டு
மூவர் உயிரிழப்பிற்கு அரசே பொறுப்பு : எதிர்கட்சித்தலைவர் குற்றச்சாட்டு தி.மு.க., அமைப்பாளர் சிவா குற்றச்சாட்டு
மூவர் உயிரிழப்பிற்கு அரசே பொறுப்பு : எதிர்கட்சித்தலைவர் குற்றச்சாட்டு தி.மு.க., அமைப்பாளர் சிவா குற்றச்சாட்டு
மூவர் உயிரிழப்பிற்கு அரசே பொறுப்பு : எதிர்கட்சித்தலைவர் குற்றச்சாட்டு தி.மு.க., அமைப்பாளர் சிவா குற்றச்சாட்டு
ADDED : செப் 10, 2025 08:04 AM
புதுச்சேரி: கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்து 3 பேர் இறந்த சம்பவத்திற்கு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என, தி.மு.க., அமைப்பாளர் சிவா குற்றம் சாட்டியுள்ளார்.
உருளையன்பேட்டை அசுத்தமான குடிநீர் குடித்த 3 பேர் இறந்த சம்பவத்தை கண்டித்து தி.மு.க.,சார்பில் தலைமை பொறியாளர் அலுவலக்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதில் பங்கேற்ற தி.மு.க., அமைப்பாளர் சிவா பேசியதாவது:
புதுச்சேரியில் ஒரு இடத்தில் மட்டும் குடிநீர் பிரச்னை இல்லை. எல்லா தொகுகளிலும் இதே பிரச்னை உள்ளது. ஆனால் அரசு கண்ணை மூடிக்கொண்டுள்ளது. அப்பாவி மக்கள் 3 பேர் இறந்ததற்கு அரசு தான் முழு காரணம். மக்களிடம் சென்று பிரச்னை குறித்து கேட்க வேண்டும். முதல்வர், அமைச்சர்கள் ஏசி., அறையில் அமர்ந்து கொண்டு மீட்டிங் போடுன்றனர்.
மூன்று பேர் இறந்துள்ளனர். பதிக்கப்பட்டவர்களை முதல்வர் இதுவரை பார்த்தரா? பொதுப்பணித்துறை அமைச்சர், செயலர் எங்கே சென்றனர்.
இவ்விவகாரத்தில் போர்க்கால அடிப்படையில் அரசு களம் இறங்க வேண்டும். மக்கள் பீதியில் உள்ளனர். அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.
பழைய குடிநீர் குழாய்களை மாற்ற வேண்டும். எல்லா தண்ணீத் தொட்டியிலும் ஒரு அடி, அரை அடி சேறு உள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நல்ல தண்ணீர் கிடைக்கும் வரை அரசு இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன் தர வேண்டும்.
உயிரிழந்த குடும்பத்துக்கு ரூ. 5 லட்சமும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கவேண்டும்.
மக்களுக்கு வேண்டியதை செய்யாவிட்டால் அவர்கள் வரும் தேர்தலில் உங்களை காணாமல் போகச்செய்வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.