/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.மு.க., போராட்டம்; தண்ணீர் பானைகளை உடைத்து கோஷமிட்டதால் பரபரப்பு பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.மு.க., போராட்டம்; தண்ணீர் பானைகளை உடைத்து கோஷமிட்டதால் பரபரப்பு
பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.மு.க., போராட்டம்; தண்ணீர் பானைகளை உடைத்து கோஷமிட்டதால் பரபரப்பு
பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.மு.க., போராட்டம்; தண்ணீர் பானைகளை உடைத்து கோஷமிட்டதால் பரபரப்பு
பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.மு.க., போராட்டம்; தண்ணீர் பானைகளை உடைத்து கோஷமிட்டதால் பரபரப்பு
ADDED : செப் 10, 2025 08:03 AM

புதுச்சேரி : கோவிந்தசாலைப் பகுதியில் மாசு கலந்த குடிநீர் குடித்து மூன்று பேர் பலியான சம்பவத்தை கண்டித்து பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தை தி.மு.க.,வினர் முற்றுகையிட்டு தண்ணீர் பானையை உடைத்து கோஷ்மிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உருளையன்பேட்டை, கோவிந்தசாலை பகுதியில் மாசு கலந்த குடிநீரை குடித்த 3 பேர் இறந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனை கண்டித்து தி.மு.க., சார்பில், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் தண்ணீர் பானைகளை உடைத்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ராஜினாமா செய்ய வலியுத்தி கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி, தி.மு.க., அமைப்பாளர் சிவா பேசினார்.
எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, தலைமைப் பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், வேலவன், வேலன், தொகுதி செயலாளர்கள் சக்திவேல், நடராஜன், சக்திவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், வேலவன், வேலன், நர்கிஸ் தொகுதி செயலாளர்கள் சக்திவேல், நடராஜன், சக்திவேல் மாணவரணி அமைப்பாளர் மணிமாறன், இலக்கியா அணி அமைப்பாளர் மோகன்தாசு உட்பட பலர் பங்கேற்றனர்.