ADDED : ஜூன் 14, 2025 11:15 PM

புதுச்சேரி : புதுச்சேரி மாநில அமைச்சூர் ஹேண்ட்பால் சங்கம், புதுச்சேரி மாவட்ட ஹேண்ட்பால் சங்கம் இணைந்து 9வது மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஹேண்ட்பால் சாம்பியன் போட்டி உப்பளம் விளையாட்டு மைதனாத்தில் நேற்று துவங்கியது.
நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் காந்திராஜ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அனிபால்கென்னடி எம்.எல்.ஏ., கலந்து கொண்டு போட்டியினை துவக்கி வைத்தார்.
போட்டியில் 6 ஆண்கள் அணி, 4 பெண்கள் அணி கலந்து கொண்டனர். வெற்றி பெறும் அணிகளுக்கு இன்று மாலை பரிசளிப்பு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை புதுச்சேரி மாவட்ட துணை தலைவர்ஆறுமுகம், மாவட்ட செயலாளர் விஜயராஜா, துணை செயலாளர் கோரிதம் ஆகியோர் செய்திருந்தனர்.விஜயராஜா நன்றி கூறினார்.