/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'ஆர்கானிக்' காய்கறி உற்பத்தி 5,000 வீடுகளில் மாடி தோட்டம்; மானியத்தில் உபகரணங்கள் வழங்க ஏற்பாடு 'ஆர்கானிக்' காய்கறி உற்பத்தி 5,000 வீடுகளில் மாடி தோட்டம்; மானியத்தில் உபகரணங்கள் வழங்க ஏற்பாடு
'ஆர்கானிக்' காய்கறி உற்பத்தி 5,000 வீடுகளில் மாடி தோட்டம்; மானியத்தில் உபகரணங்கள் வழங்க ஏற்பாடு
'ஆர்கானிக்' காய்கறி உற்பத்தி 5,000 வீடுகளில் மாடி தோட்டம்; மானியத்தில் உபகரணங்கள் வழங்க ஏற்பாடு
'ஆர்கானிக்' காய்கறி உற்பத்தி 5,000 வீடுகளில் மாடி தோட்டம்; மானியத்தில் உபகரணங்கள் வழங்க ஏற்பாடு
ADDED : ஜூன் 14, 2025 11:17 PM

'ஆர்கானிக்' காய்கறி உற்பத்தியை அதிகரிக்க 5 ஆயிரம் வீடுகளுக்கு மொட்டை மாடி தோட்டம் அமைக்க உபகரணங்கள் வழங்கும் பணியை புதுச்சேரி வேளாண் துறை துவங்குகிறது.
ரசாயன உரங்கள் அற்ற (ஆர்கானிக்) இயற்கை காய்கறிகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் தற்போது புதுச்சேரி மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஆனால் ஆர்கானிக் காய்கறி உற்பத்தி குறைவு காரணமாக அதிக விலைக்கு விற்கப்படுவதால், பலரால் இதனை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது.
இதனை மாற்றும் விதமாக புதுச்சேரி வேளாண் துறை, தோட்டக்கலை பிரிவு சார்பில், 5,000 வீடுகளில் மொட்டை மாடி தோட்டம் அமைக்க தேவையான உபகரணங்களை வழங்க உள்ளது. இதில் முதற்கட்டமாக புதுச்சேரி முழுதும் உள்ள நான்கு தெருக்களை சேர்ந்த 20 வீடுகளின் நபர்களை ஒரு குழுவாக ஏற்படுத்தி, மொத்தம் 150 குழுவை சேர்ந்த 3 ஆயிரம் பேருக்கு நுாறு சதவீத மானியத்தில் தலா ரூ.5,000 மதிப்புள்ள உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது.
இதில் பத்து விதமான காய்கறி விதைகள், 20 செடி வளர்ப்பு பைகள், நாற்று வளர்ப்பு ட்ரே, 100 கிலோ எரு கலந்த மண், மண்புழு உரம், நீர் தெளிப்பான், அதற்கு தேவையான பிளாஸ்டிக் பைப், 20 சதுர அடி (நிழல் பந்தல்) ஷேடோ நெட், கத்தரி, கடப்பாறை, மண்வெட்டி ஆகியவை உட்பட 28 உபகரண பொருட்கள் வழங்கப்படுகிறது.
மேலும், குழுவை சேராத தனி நபர்களுக்கு இந்த உபகரண பொருட்கள் 750 ரூபாய் மானிய விலையில் 2,000 பேருக்கு கூடுதலாக வழங்கப்பட உள்ளது.
உபகரணங்கள் வழங்கும் பணி நாளை முதல் துவங்கும் என, வேளாண்துறை அதிகாரிகள் கூறினர்.