/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஸ்பிக், கிரீன் ஸ்டார் உர நிறுவனங்கள் வேளாண் சேவை வாகனம் துவக்கம்ஸ்பிக், கிரீன் ஸ்டார் உர நிறுவனங்கள் வேளாண் சேவை வாகனம் துவக்கம்
ஸ்பிக், கிரீன் ஸ்டார் உர நிறுவனங்கள் வேளாண் சேவை வாகனம் துவக்கம்
ஸ்பிக், கிரீன் ஸ்டார் உர நிறுவனங்கள் வேளாண் சேவை வாகனம் துவக்கம்
ஸ்பிக், கிரீன் ஸ்டார் உர நிறுவனங்கள் வேளாண் சேவை வாகனம் துவக்கம்
ADDED : ஜன 25, 2024 05:33 AM

புதுச்சேரி : ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டார் உர நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை கிண்டியில் இயங்கி வருகிறது. ஸ்பிக் நிறுவனத்தின் விரிவுப்படுத்தப்பட்ட பல்வேறு வேளாண் சேவைகள் குறித்து விவசாயிகளிடம் காட்சிப்படுத்தவும், புதிய வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, காணொலி காட்சியுடன் கொண்ட பிரத்யேக வடிவமைக்கப்பட்ட வேளாண் சேவை வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு வாகனம் துவக்க விழா, கிண்டி ஸ்பிக் ஹவுசில் நடந்தது.
ஸ்பிக் நிறுவன விற்பனை பிரிவு இயக்குநர் நாராயணன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் உள்ள தலைமை நிர்வாகிகள், டீலர்கள், விற்பனை அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுபோன்று மேலும் 6 விழிப்புணர்வு வாகனங்கள் வேளாண் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட உள்ளதாக ஸ்பிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.