/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மத்திய அரசிடம் சிறப்பு மானியம் கேட்கப்படும்; முதல்வர் ரங்கசாமி மத்திய அரசிடம் சிறப்பு மானியம் கேட்கப்படும்; முதல்வர் ரங்கசாமி
மத்திய அரசிடம் சிறப்பு மானியம் கேட்கப்படும்; முதல்வர் ரங்கசாமி
மத்திய அரசிடம் சிறப்பு மானியம் கேட்கப்படும்; முதல்வர் ரங்கசாமி
மத்திய அரசிடம் சிறப்பு மானியம் கேட்கப்படும்; முதல்வர் ரங்கசாமி
ADDED : மார் 26, 2025 03:57 AM
புதுச்சேரி : சட்டசபை கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்;
சிவசங்கர் (சுயே.,): அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு ஆசிய வங்கி மூலம் ரூ.3 ஆயிரம் கோடி கடன் பெற மத்திய அரசு பரிந்துரை செய்து உள்ளதாகவும், அரசு அதை பெற்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையை மத்திய அரசு புதுச்சேரிக்கான கடனாக பெற்று தராமல் மத்திய அரசின் கடனாக வாங்கி சிறப்பு நிதி உதவியாக பெற அரசு முயற்சிக்க வேண்டும்.
முதல்வர் ரங்கசாமி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான ஒருங்கிணைந்த நகர்ப்புற வாழ்வாதார திட்ட பெயரில் ஆசிய வங்கியிடம் இரு கட்டமாக ரூ.4,750 கோடி கடனாக பெற அரசு சமர்ப்பித்த திட்ட முன்மொழிவு, மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. தற்போது அந்த தொகையை சிறப்பு மானியமாக விடுவிக்க மத்திய அரசிடம் கோரப்படும்.