/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளிகளில் சி.சி.டி.வி., கேமரா பாஸ்கர் எம்.எல்.ஏ., கோரிக்கை அரசு பள்ளிகளில் சி.சி.டி.வி., கேமரா பாஸ்கர் எம்.எல்.ஏ., கோரிக்கை
அரசு பள்ளிகளில் சி.சி.டி.வி., கேமரா பாஸ்கர் எம்.எல்.ஏ., கோரிக்கை
அரசு பள்ளிகளில் சி.சி.டி.வி., கேமரா பாஸ்கர் எம்.எல்.ஏ., கோரிக்கை
அரசு பள்ளிகளில் சி.சி.டி.வி., கேமரா பாஸ்கர் எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : மார் 26, 2025 03:57 AM
புதுச்சேரி : சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில், அனைத்து அரசு பள்ளிகளில் சி.டி.சி.வி., கேமராக்கள் பொருத்த வேண்டும் என, பாஸ்கர் எம்.எல்.ஏ., பேசினார்.
புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களை பயோ மெட்ரிக் மூலம் அவர்களின் வருகையை உறுதி செய்து, குறுந்தகவல் மூலமாக ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அனைத்து அரசு பள்ளிகளிலும், சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும். அரியாங்குப்பத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீராம்பட்டினத்தில் செயற்கை பவளப்பாறை திட்டம், வண்ண மீன்கள் பண்ணை அமைக்க வேண்டும். வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தை மீட்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து சுகாதார நிலையங்களில், சித்தா ஆயுர்வேத பிரிவு தொடங்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட மக்களின் வருமான சான்றிதழ் பெற வருமான உச்சவரம்பை ஒன்றரை லட்சமாக உயர்த்த வேண்டும். மீன்வளத்துறையில், 70 சதவீதம் காலி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. ஊரக வளர்ச்சி மேம்பாட்டு துறையின் கீழ் வழங்கப்படும் நுாறு நாட்கள் வேலை திட்டத்தை, முழுமையாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.