/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார பிரமோற்சவ விழா சுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார பிரமோற்சவ விழா
சுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார பிரமோற்சவ விழா
சுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார பிரமோற்சவ விழா
சுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார பிரமோற்சவ விழா
ADDED : அக் 16, 2025 11:33 PM
புதுச்சேரி: சாரம் முத்து விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி, நாக முத்துமாரியம்மன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார பிரமோற்சவ விழா வரும் 21ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது.
அதையொட்டி, இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு அபி ேஷக ஆராதனை நடக்கிறது. 22ம் தேதி முதல் வரும் 3ம் தேதி வரை அம்மனுக்கு தினமும் காலை அபி ேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. 22ம் தேதி காலை 10:30 மணிக்கு காப்பு கட்டுதலை தொடர்ந்து, கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது.
27ம் தேதி 6ம் நாள் இரவு 7:00 மணிக்கு சூரசம்ஹார உற்சவம், மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 28ம் தேதி இரவு 7:00 மணிக்கு வள்ளி தேவசேனா, சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. 31ம் தேதி மாலை 5:00 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம், 3ம் தேதி காலை 8:00 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பொன் நீலகண்டன் செய்துள்ளார்.


