Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 71,524 தொழிலாளர்களுக்கு 'போனஸ்' கவர்னர் அலுவலகத்திற்கு கோப்பு அனுப்பிய முதல்வர்

71,524 தொழிலாளர்களுக்கு 'போனஸ்' கவர்னர் அலுவலகத்திற்கு கோப்பு அனுப்பிய முதல்வர்

71,524 தொழிலாளர்களுக்கு 'போனஸ்' கவர்னர் அலுவலகத்திற்கு கோப்பு அனுப்பிய முதல்வர்

71,524 தொழிலாளர்களுக்கு 'போனஸ்' கவர்னர் அலுவலகத்திற்கு கோப்பு அனுப்பிய முதல்வர்

ADDED : அக் 16, 2025 11:33 PM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: கட்டுமான தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உயர்த்தப்பட்ட தீபாவளி போனஸ் வழங்க கவர்னர் அலு வலகத்திற்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது.

புதுச்சேரி கட்டட மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள கட்டட தொழிலாளர்களுக்கு 5 ஆயிரம் தீபாவளி போனஸ் அரசு சார்பில், ஆண்டுதோறும், வழங்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டு 5 ஆயிரம் ரூபாய்க்கு பதில் 6 ஆயிர மாக உயர்த்தி வழங்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

ஆனால், 60 வயதிற்கு மே ற்பட்டவர்களுக்கு வழங்கப்படாது என, தகவல் பரவியது. கொந்தளித்த கட்டுமான தொழிலாளர்கள் நேற்று முன்தினம் மறியல், முற்றுகை போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

தொழிற்சங்க பேச்சுவார்த்தையின்போது, 'கடந்தாண்டை போலவே 60 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி உறுதியளித்தார்.

அதன்படி, 60 வயதிற்கு மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு ஒரு முறை தளர்வு அளித்து அனைத்து தொழிலாளர்களுக்கும் உயர்த்தப்பட்ட 6 ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்க கவர்னர் கைலாஷ்நாதனுக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது.

ஓரிரு தினங்களில் கவர்னர் அனுமதியுடன் அனைத்து பயனாளிகளுக்கும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.

இதன் மூலம் 34,342 உறுப்பினர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட 9,151 கட்டட தொழிலாளர்கள் பயனடைய உள்ளனர்.

இதேபோல் சமூக பாதுகாப்பு நல வாரியத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள், வீட்டு வேலை செய்வோர், சுய தொழில் செய்வோர், கடை வைத்துள்ளவர்கள் என 28,031 உறுப்பினர்கள் உள்ளனர்.

இவர்களுக்கு கடந்த காலங்களில் 1,500 ரூபாய் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஊக்கத் தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்த கோப்பிற்கும் அனுமதி கேட்டு கவர்னர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கவர்னர் ஒப்புதல் கிடைத்ததும் 71,524 கட்டட, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us