/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாரதா நவராத்திரி சத சண்டி மகா ஹோமம் இன்று துவக்கம் சாரதா நவராத்திரி சத சண்டி மகா ஹோமம் இன்று துவக்கம்
சாரதா நவராத்திரி சத சண்டி மகா ஹோமம் இன்று துவக்கம்
சாரதா நவராத்திரி சத சண்டி மகா ஹோமம் இன்று துவக்கம்
சாரதா நவராத்திரி சத சண்டி மகா ஹோமம் இன்று துவக்கம்
ADDED : செப் 21, 2025 11:18 PM

புதுச்சேரி: புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், 6ம் ஆண்டு சாரதா நவராத்திரி சத சண்டி மகாஹோமம் இன்று (22ம் தேதி) துவங்குகிறது.
புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், 6ம் ஆண்டு சாரதா நவராத்திரியில் சத சண்டி மகா ஹோமம் இன்று (22ம் தேதி) முதல் அக்டோபர் 2ம் தேதி வரை, லாஸ்பேட்டை இ.சி.ஆரில் உள்ள சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடக்கிறது.
இதையொட்டி, நேற்று காலை மகா கணபதி ஹோமம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, இன்று முதல்தினசரி காலை 7:00 மணிக்கு கோ பூஜை, அஸ்வ பூஜை, விக்னேஸ்வர பூஜை, நவாவரண பூஜையுடன் துவங்கி வேதிகார்ச்சனை, சப்தசதி பாராயணம், சப்தசதி ஹோமம், மஹாபூர்ணாஹுதி, தீபாராதனை நடக்கிறது.
சப்தசதி பாராயண ஹோமத்தின்போது அத்யாயத்திற்கு ஒன்று என, 13 அத்யாயங்களுக்கு 13 புடவைகள், மங்கல பொருட்கள், பழங்கள் 13 முறை ஆஹூதி செய்யப்பட்டு மஹா பூர்ணாஹூதியில் பட்டுப்புடவை, திருமங்கல்யம், மூலிகை பொருட்கள் சேர்த்து, தீபாராதனை நடக்கிறது. மதியம் 1:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.
மாலை 5:00 மணிக்கு லலிதா சஹஸ்ரநாமம், 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வேதிகார்ச்சனை, மூலமந்திர ஹோமம், பூர்ணாஹூதி, சதுர்வேத உபசாரம் நடைபெற்று மாலை கலை நிகழ்ச்சி, உபன்யாசம் நடக்கிறது.