/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சென்டாக் வரைவு தரவரிசை பட்டியல் திருத்தம் செய்ய நாளை வரை கெடு சென்டாக் வரைவு தரவரிசை பட்டியல் திருத்தம் செய்ய நாளை வரை கெடு
சென்டாக் வரைவு தரவரிசை பட்டியல் திருத்தம் செய்ய நாளை வரை கெடு
சென்டாக் வரைவு தரவரிசை பட்டியல் திருத்தம் செய்ய நாளை வரை கெடு
சென்டாக் வரைவு தரவரிசை பட்டியல் திருத்தம் செய்ய நாளை வரை கெடு
ADDED : ஜூன் 25, 2025 01:07 AM
புதுச்சேரி : சென்டாக் வெளியிட்ட நீட் அல்லாத படிப்புகளுக்கான வரைவு தரவரிசை பட்டியலில் உள்ள ஆட்சேபனைகளை நாளை 26ம் தேதி மாலைக்குள் பதிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் உள்ள அனைத்து படிப்புகளுக்கு சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
நீட் அல்லாத படிப்புகளுக்கு கடந்த மே 12ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை ஆன்லைனில் 13,256 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான உத்தேச தரவரிசைப் பட்டியல் நேற்று முன்தினம் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில், திருத்தம் இருப்பின் அதற்கான ஆவணங்களை நாளை 26ம் தேதி மாலை 5 மணிக்குள் சென்டாக் இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். அதனை பரிசீலித்து மீண்டும் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கான நுழைவுத்தேர்வு நடத்திய பின் அவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.