Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஒரு நாளைக்கு முன் பள்ளி வாகனங்கள் ஆய்வு

ஒரு நாளைக்கு முன் பள்ளி வாகனங்கள் ஆய்வு

ஒரு நாளைக்கு முன் பள்ளி வாகனங்கள் ஆய்வு

ஒரு நாளைக்கு முன் பள்ளி வாகனங்கள் ஆய்வு

ADDED : மே 31, 2025 11:45 PM


Google News
Latest Tamil News
பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பயணிக்கும் வாகனங்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க ஒவ் வொரு கல்வி ஆண்டு துவங்குவதற்கு முன்பாக, பள்ளி, கல்லுாரி வாகனங்களை போக்கு வரத்து துறையினர் ஆய்வு செய்து, தரச்சான்று வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில், வரும் கல்வி ஆண்டு நாளை துவங்குவதையொட்டி, பள்ளி, கல்லுாரி வாகனங்கள் கடந்த இரு வாரங்களுக்கு முன் ஆய்வு செய்யப்பட்டது.

ஆனால், புதுச்சேரியில் நாளை 2ம் தேதி பள்ளி திறக்க உள்ள நிலையில், போக்குவரத்து துறை பள்ளி வாகனங்களை நேற்று ஆய்வு செய்தது.

புதுச்சேரி பிராந்தியத்தில் கல்வி நிறுவனங்களின் 295 வாகனங்கள் ஆய்விற்கு காலை 8:00 மணிக்கு மேட்டுப் பாளையம் போக்குவரத்து முனையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

10:00 மணிக்கு வந்த கலெக்டர் மற்றும் போக்குவரத்து துறை கமிஷனரும் ஒரு பஸ்சை சற்று துாரம் இயக்க செய்து ஆய்வு செய்தனர்.

பின், தீயணைப்பு கருவி செயல்படுத்தும் முறை குறித்த செயல் விளக்கம் நடந்தது. அதே நேரத்தில் காலை 11;30 மணி அளவில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், ஆய்வுக்கு வந்த 295 வாகனங்களையும் ஆய்வு செய்ததாகவும், அதில், 239 வாகனங்கள் முழு தகுதி உள்ளதாகவும், 36 வாகனங்களில் மட்டும் சிறுசிறு குறைபாடு உள்ளதாக தெரிவித்தனர்.

அப்போது, அங்கிருந்த நிருபர்கள், அதிகாரிகளிடம் வாகனங்களை ஆய்வு செய்வதை புகைப்படம் எடுக்க வேண்டும் எனக் கேட்டனர். உடன், கலெக்டர், கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் அருகில் இருந்த தனியார் மகளிர் கல்லுாரி பஸ்சின் அவசரகால கதவை திறக்க முயன்றனர்.

கதவு திறக்காமல் மக்கர் செய்ததால், டிரைவர் உள்ளிட்ட கல்லுாரி ஊழியர்கள் கதவை திறக்க முயன்றனர். எவ்வளவோ முயன்றும், கைப்பிடி மட்டும் தான் தனியாக கழன்று கையோடு வந்ததே தவிர, கடைசி வரை கதவை திறக்க முடியவில்லை.

ஆனால், அந்த பஸ் ஆய்வு செய்து முழு தகுதி உள்ளதாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது தான் 'ைஹலைட்'. அந்த அளவிற்குதான் ஒட்டுமொத்த ஆய்வும் நடந்துள்ளது.மொத்தம் 295 வாகனங்களையும் 2 மணி நேரத்தில் ஆய்வு செய்தது வியப்பாகவும், விந்தையாகவுமே இருந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us