Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போலீசுக்கு தண்ணி காட்டும் எஸ்டாபிளிஸ்மென்ட் பிரிவு

போலீசுக்கு தண்ணி காட்டும் எஸ்டாபிளிஸ்மென்ட் பிரிவு

போலீசுக்கு தண்ணி காட்டும் எஸ்டாபிளிஸ்மென்ட் பிரிவு

போலீசுக்கு தண்ணி காட்டும் எஸ்டாபிளிஸ்மென்ட் பிரிவு

ADDED : மே 31, 2025 11:45 PM


Google News
இன்றைய விஞ்ஞான உலகில், சிறு குழந் தைகள் கூட 'ஏ.ஐ' உட் பட அனைத்து நவீன தொழில் நுட்பங்களையும் கையாண்டு வருகின்றனர். கையடக்க மொபைல் போனில் உலகத்தையே உள்ளங்கையில் கொண்டு வந்துள்ள இந்த காலத்தில், புதுச்சேரி போலீஸ் துறை இன்னும் நவீன காலத்திற்கேற்ப 'அப்டேட்' ஆகாமல், ஆதிகாலத்து நடைமுறையையே பின்பற்றி வருகிறது.

அதிலும், குறிப்பாக துறையில் பணியாற்றும் போலீசாரின் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பராமரிக்கப்பட்டு வரும் பணிப்பதிவேடு (சர்வீஸ் புக்) இன்னமும் நோட்டில் எழுதி, போலீஸ் தலைமையகத்தில் உள்ள 'எஸ்டாபிளிஸ்மென்ட்' பிரிவில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதில், ஒவ்வொருவரின் பணியில் சேர்ந்த தேதி, பணி புரிந்த இடங்கள், பதவி உயர்வு, நன்னடத்தை சான்று, பெற்ற விருதுகள், பணி குறைபாடு உள்ளிட்ட ஒட்டுமொத்த விபரங்களும் உள்ளடங்கி இருக்கும். இதனை வைத்தே, அவரது பதவி உயர்வு முடிவு செய்யப்படுகிறது.

அரசின் பல துறைகளில் இந்த சர்வீஸ் புக் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில், போலீஸ் துறை மட்டும் இன்னமும் ஆதிகால முறையையே பின்பற்றி வருவதால், பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது.

குறிப்பாக, பதவி உயர்வு தடைபட்ட விபரங்களை சேகரிக்க சர்வீஸ் புத்தகத்தை தேடி செல்லும் போலீசாருக்கு, தேடி பார்த்து தருகிறோம் என திருப்பி அனுப்புகின்றனர்.

இதனால், போலீசார் பலர், தங்கள் சர்வீஸ் புத்தகத்திற்காக போலீஸ் தலைமையகத்தில் உள்ள 'எஸ்டாபிளிஸ்மின்ட்' பிரிவிற்கு நடையாய் நடந்து கொண்டிருப்பதும், அவர்களுக்கு இன்று போய், நாளை வா என சாக்கு போக்கு சொல்லி திருப்பி அனுப்புவது வேதனையாக உள்ளது.

இந்நிலையை மாற்றிட 'போலீசாரின் சர்வீஸ் புத்தகங்களை 'டிஜிட்டல்' மை யமாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us